செய்யாறு நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடக்கம் ; திருப்பதி, மேல்மருவத்தூர் கோவில்களுக்கு இனி ஈஸியான பயணம்..!!!

Author: Babu Lakshmanan
20 March 2024, 7:35 pm
Quick Share

செய்யாறு 4 வழிச்சாலை விரிவாக்கத் திட்டப்பணிகளுக்கு ஒப்பந்தப் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் KCP INFRA Limited நிறுவனம், சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், குறுகிய பாலங்கள் மற்றும் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் மட்டுமல்லாது, ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளையும் வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் செய்து முடித்துள்ளது.

இந்த நிலையில், ஆற்காடு – திண்டிவனம் இடையேயான மாநில நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தத்தை கேசிபி நிறுவனம் எடுத்துள்ளது.

நெடுஞ்சாலை விரிவாக்கத்தோடு, மழைக்காலத்தில் வெள்ளம் தேங்காமல் இருக்க வசதியாக, சிறு பாலங்கள், பாதாள சாக்கடை, தண்ணீர் பாய்ந்தோட வசதியாக சிறிய குழாய் அமைப்புடன் கூடிய பாலங்கள் என பல்வேறு கட்டமைப்புகளும் அமைக்கப்ட இருக்கிறது. குறிப்பாக, திருப்பதி, புதுச்சேரி, காஞ்சிபுரம் மற்றும் மேல்மருவத்தூர் கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாகவே இந்த சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, நகரப் பேருந்துகள், வெளிமாவட்ட பேருந்துகள் வந்து செல்ல வசதியாக, பல பேருந்து வழித்தடங்களுக்கான சாலை அமைக்கப்படுகிறது.

இது தொடர்பாக KCP INFRA Limited நிறுவனத்தின் நிர்வாக இயக்கநர் KCP ChandraPrakash கூறுகையில், “எதிர்காலத்தில் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரபிரதேசம் வாகன ஓட்டிகளுடன் சேர்த்து குறைந்தபட்சம் ஒரு லட்சம் வாகனங்கள் வந்து செல்லும் வகையில் சாலை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. ஒப்பந்த காலத்திற்குள் கட்டுமானப் பணிகளை முடித்துக் கொடுக்க முயற்சி செய்வோம். இதன் மூலம் மக்கள் போக்குவரத்திற்காக அதைப் பயன்படுத்த முடியும். எங்களின் நல்ல தரமான வேலையை நிரூபிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்,” எனக் கூறினார்.

Views: - 235

0

0