நீங்க சிட்டிங் எம்பி என்பது மறந்து போச்சா..? திமுக எம்பி கனிமொழிக்கு நடிகை விந்தியா சரமாரி கேள்வி..!

Author: Babu Lakshmanan
2 April 2024, 11:30 am

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கனிமொழி எம்பி செய்த திட்டங்கள் என்ன? என்று அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளர் நடிகை விந்தியா கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணிக்கு ஆதரவாக தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :- கடந்த தேர்தலில் பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றி பெற்ற கனிமொழி, கடந்த ஐந்து வருடத்தில் இந்த தொகுதியில் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

மேலும் படிக்க: பாஜக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது… வெளியான புது கருத்துக்கணிப்பு ; பிரேமலதா சொன்ன தகவல்…!!

தற்போது மீண்டும் எதிர்க்கட்சி வேட்பாளர் போன்று, மீண்டும் நான் வெற்றி பெற்றால் இதை செய்வேன். அதை செய்வேன் என்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்தார்களா? கஞ்சா, மது ஒழித்தார்களா..? திமுக இந்த தேர்தலில் நீட் பத்தியோ, சிஏஏ குடியுரிமை பற்றியோ ஏன் பேசவில்லை.

மேலும் படிக்க: மதுரை முத்து போல PROPERTY காமெடி செய்கிறார் உதயநிதி ; சீமான் கிண்டல்…!!!

மேலும், தமிழக மீனவர்கள் பற்றி கவலைப்படாதவர்கள் தான் திமுகவினர். கடந்த தேர்தலில் பொய்யான வாக்குறுதி அளித்தது போல், இந்த தேர்தலிலும் நாங்கள் ஜெயித்தால் சிலிண்டர் 500 ரூபாய்க்கு தருகிறோம்.

பெட்ரோல் 75 ரூபாய்க்கு தருகிறோம், டீசல் 65 ரூபாய்க்கு தருகிறோம் என பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்து வருகிறது, என்றார்.

  • devi sri prasad complains that turkish singer copied his pushpa movie song என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!