Gold and Silver rate ; கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை… சட்டென குறைவு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
2 April 2024, 10:40 am

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.50 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று தங்கம் விலை ரூ.680 அதிகரித்த நிலையில், ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சரிந்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ6,430க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.51,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.21 குறைந்து ஒரு கிராம் ரூ.5,267க்கும், சவரனுக்கு ரூ.168 குறைந்து ஒரு சவரன் ரூ.42,136க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: பாஜக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது… வெளியான புது கருத்துக்கணிப்பு ; பிரேமலதா சொன்ன தகவல்…!!

வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.82.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.82,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ