பெயர் சொல்லி கூப்பிட கூட விரும்பல… ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றி விட்டாரு ; ஆ.ராசா குறித்து நடிகை நமீதா விமர்சனம்…!!

Author: Babu Lakshmanan
8 April 2024, 8:33 pm

கடந்த பத்து ஆண்டுகளில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையால் மக்களின் நேர விரயம் பா.ஜ.க அரசால் குறைக்கப்பட்டுள்ளதாக நடிகை நமீதா மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகனுக்கு ஆதரவு கேட்டு திரைப்பட நடிகை நமீதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நடந்த வாகன பிரச்சாரத்தில் பேசிய நடிகை நமீதா, கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகப்பெரிய வளர்ச்சியை இந்தியாவிற்கு அளித்துள்ளதாக கூறினார்.

மேலும் படிக்க: கஜானாவை மட்டுமே நிரப்பும் திமுக… மக்களுக்கான ஒரே கட்சி அதிமுக மட்டுமே ; இபிஎஸ் பிரச்சாரம்…!!

குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் குகூள் பே,பே.டி.எம் போன்ற டிஜிட்டல் பணபரிவர்த்தனை மூலம் வங்கிகளில் காத்திருக்கும் நிலையை எளிமையாக்கி பொதுமக்களுக்கு கால நேர விரயத்தையும், சிரமங்களையும் குறைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: ‘மாட்டிக்கினாரு ஒத்தரு… அவர காப்பாத்தனும் கர்த்தரு’… சர்ச் உண்டியலில் பணம் திருடிய கொள்ளையன் ; சிசிடிவி காட்சி…!!

அத்துடன் செல்போன் பயன்பாட்டினை பொறுத்தவரை உலகத்தில் எங்கும் இல்லாத வகையில் செல்போன் டேட்டா உபயோகத்தில் கட்டணம் இந்தியாவில் மட்டுமே குறைந்த அளவில் உள்ளதாகவும், வெளிநாட்டில் ஒரு ஜீ.பி டேட்டா 300 ரூபாயாக உள்ள நிலையில், இந்தியாவில் 10 ரூபாய் மட்டுமே என சுட்டிக்காட்டினார்.

மேலும் ஏற்கனவே நீலகிரி தொகுதி எம்.பியாக உள்ள ஆ.ராசாவை தனக்கு பெயர் சொல்லி கூட விருப்பம் இல்லை என்றும், நம்பி வாக்களித்த மக்களை அவர் அவமானபடுத்துவதாகவும், மக்களின் நம்பிக்கையான கடவுள் வழிபாட்டினை கொச்சைப்படுத்தி அவமானப்படுத்துவதாகவும் கூறிய நடிகை நமிதா, வரும் தேர்தலில் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், அப்போது தான் தமிழகம் வளரும், எனக் கூறினார்.

  • many production companies are applying for the title operation sindoor போரே முடியல, அதுக்குள்ள இப்படியா? ஆபரேஷன் சிந்தூரை திரைப்படமாக எடுக்க முந்தியடிக்கும் தயாரிப்பாளர்கள்!