வாக்காளர்கள் விடுபட்டதற்கு அரசின் தோல்வி பயம்… நீலகிரி பா.ஜ.க, வேட்பாளர் L.முருகன் குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
19 April 2024, 9:46 pm

வாக்காளர்கள் விடுபட்டதற்கு தோல்வி பயத்தால் அரசு செய்த செயல் என பா.ஜ., வேட்பாளர் முருகன் குற்றச்சாட்டினர்.

நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க, வேட்பாளர் ஊட்டி ஹோபர்ட் பள்ளியில் உள்ள ஓட்டு சாவடி மையத்தை பார்வையிட்டார்.

மேலும் படிக்க: இந்த முறை கூடுதல் வாக்குப்பதிவு… தேர்தல் விதிமுறைகளில் திடீர் தளர்வு… தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்!!!

பின், நிருபர்களிடம் கூறுகையில், நீலகிரி லோக்சபா தொகுதியில் சில ஓட்டு சாவடிகளில் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. வாக்காளர்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மாநில அரசு தோல்வி பயத்தால் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். ஆரம்பத்திலிருந்தே தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நியாயமாக நடக்க வேண்டும் என்று சொல்லி வருகிறோம், ஆனால், நியாயமாக நடக்கவில்லை, இவ்வாறு முருகன் தெரிவித்தார்.

  • paresh rawal drank urine for leg injury ச்சீ இப்படி ஒரு வைத்தியமா? காயத்திற்கு மருந்தாக தன்னுடைய சிறுநீரை தானே குடித்த சூர்யா பட நடிகர்!