கலப்பட மது?.. கள்ளச்சாராயம்?.. மதுகுடித்த 2 பேருக்கு வாந்தி, மயக்கம் – மருத்துவமனையில் அனுமதி..!

Author: Vignesh
29 June 2024, 4:12 pm

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மஞ்சுநாயக்கனூரை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் மகேந்திரன், ரவி இவர்கள் இருவரும் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளனர். இவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு என அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளது. இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரும் கள்ளச்சாராயம் குடித்ததாக தகவல்கள் அப்பகுதி முழுவதும் பரவியது.

இதையடுத்து, கோவை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கள்ளச்சாராயம் குடித்ததாக பரவிய தகவல் வதந்தியை என்பது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து, முதல் கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தியது கள்ளச்சாராயம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது என மேற்கு மண்டல ஐஜி பவனிஸ்வரி தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!