உங்ககிட்ட G-PAY இருக்கா? அப்போ உங்க பணம் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.. போலீசார் எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2024, 10:39 am

இந்தியாவில் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. குறிப்பாக இன்றைய கால வளர்ச்சியே நமக்கு ஆபத்தாக வருகிறது.

சைபர் கிரைம் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், கூகுள் பே மூலம் புதிய வகை மோசடி அரங்கேறி வருவதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் கொடுத்துள்ள எச்சரிக்கையில், தற்போது புதிய வகை மோசடி அரங்கேறி வருகிறது. யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் வங்கிக் கணக்குக்கு கூகுள் பே (ஜிபே) மூலம் பணம் அனுப்புகிறார்.

பின்னர், அவசரத்தில் வேறு ஒருவருக்கு அனுப்புவதற்கு பதிலாக உங்கள் எண்ணுக்கு அனுப்பிவிட்டேன். எனவே, தவறுதலாக நான் அனுப்பிய பணத்தை, மீண்டும் எனக்கு அதே எண்ணில் அனுப்பி வையுங்கள் என கெஞ்சி கேட்பார்.

நீங்கள் இரக்கப்பட்டு பணத்தை திருப்பி அனுப்பும் பட்சத்தில் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட வாய்ப்பு அதிகம்.

அதனால் யாராவது உங்களுக்கு தவறாகப் பணம் அனுப்பியிருந்தால் அழைப்பாளரிடம் அடையாளச் சான்றுடன் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு வாருங்கள், பணமாக எடுத்துக்கொள்ளச் சொல்லுங்கள் என கூற வேண்டும்.

உண்மையான நபராக இருந்தால் காவல் நிலையத்துக்கு நிச்சயம் வருவார், மோசடி நபராக இருந்தால் இது கண்டிப்பாக ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே கூகுள் பே பயன்படுத்துவோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!