டூரிஸ்ட் ஃபேமிலி பார்க்க ஆசைப்பட்டு ஏமாந்துபோய் திரும்பும் ரசிகர்கள்! ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை?
Author: Prasad8 May 2025, 11:51 am
கம்மி பட்ஜெட், மிகப்பெரிய வெற்றி
கடந்த மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. சூர்யாவின் “ரெட்ரோ” திரைப்படத்துடன் இத்திரைப்படமும் வெளியானது.
ரூ.14 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் “ரெட்ரோ” என்னும் பெரும் பூதத்திற்கு இணையாக களம் இறங்கியது. ஆனால் நடந்தது என்னமோ வேறு? அதாவது “ரெட்ரோ” திரைப்படத்தை ஓவர் டேக் செய்து டாப் கியரில் சென்றுகொண்டிருக்கிறது “டூரிஸ்ட் ஃபேமிலி”.

தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் இத்திரைப்படத்திற்கு கூட்டம் அலைமோதுகிறது. வார இறுதி நாட்கள் மட்டுமல்லாது வார நாட்களிலும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளோடு திரையரங்கும் நிரம்பி வழிகிறது. ஆதலால் இத்திரைப்படத்தை பார்ப்பதற்கு ஆவலாக திரையரங்கங்களுக்குச் செல்லும் ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காததால் விரக்தியோடு வீடு திரும்புகின்றனர்.
மாபெறும் கலெக்சன்!
“டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 நாட்கள் ஆகின்றன. இந்த 7 நாட்களில் இத்திரைப்படம் உலகளவில் ரூ.25 கோடிகளை அள்ளியுள்ளதாம். தமிழகத்தில் மட்டுமே ரூ.18.28 கோடிகள் அள்ளியுள்ளது. இவ்வாறு இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சின்ன பட்ஜெட் திரைப்படமாக ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது “டூரிஸ்ட் ஃபேமிலி”. இத்திரைப்படத்திற்கு திரைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.