ஈழத்தமிழர்களின் வசனம் பேசும் முத்தையா முரளிதரன் பயோபிக் ‘800’ ட்ரைலர்!

Author: Shree
5 September 2023, 5:21 pm
Quick Share

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளராக சாதனைப் படைத்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமாக ‘800’ திரைப்படம் உருவாகியுள்ளது. எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ள இப்படத்தில் முரளிதரனாக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் மதுர் மிட்டல் நடித்துள்ளார். முரளிதரன் மனைவி மதிமலர் ராமமூர்த்தியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரைலர் சற்றுமுன் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. படத்தில் ஹீரோ ஸ்லம்டாக் மில்லியனர் நடிப்பு பிரம்மாதமாக உள்ளது என்றாலும் விஜய் சேதுபதி இந்த கேரக்டரில் நடித்திருந்தால் பக்காவாக பொருந்தியிருப்பார் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆம், முதலில் இப்படத்தில் முத்தையா முரளிதரனாக நடிக்க இருந்தது விஜய் சேதுபதி தான். ஆனால், ஈழத்தில் நடைபெற்ற இறுதிப்போரின்போது, சிங்கள அரசுக்கு ஆதரவாகத் தமிழீழப் போராளிகளை முத்தையா முரளிதரன் விமர்சித்து பேசிவந்தார். எனவே முத்தையா தமிழனத் துரோகி என திட்டித்தீர்த்தனர். அதனால் முரளிதரன் கேரக்டரில் ஒரு தமிழனாக விஜய் சேதுபதி நடிக்க கூடாது என அப்படி நடித்தால் அவர் தமிழ் ஈழ மக்களை அவமதிப்பதற்கு சமம் என உலகம் முழுவதும் தமிழர்கள் கண்டங்கள் தெரிவித்தனர். இதனால் விஜய் சேதுபதி அப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. குறிப்பாக இதன் வசனங்கள் உண்மை சம்பவங்களை உறக்கச்சொல்வது போல் உள்ளது. ஆம் ,”நான் என்னைத் தமிழனாக மட்டும் பார்க்கவில்லை. நான் கிரிக்கெட்டர்” என்று முத்தையா முரளிதரன் சர்ச்சைகளை தாண்டி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த ட்ரைலர் தற்ப்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Views: - 385

0

0