உயர் ஜாதி மீது வன்மத்தை கக்கும் வெற்றிமாறன்…. எச்சரித்த பிரபல இயக்குனர்!

Author: Rajesh
18 January 2024, 9:18 am
vetrimaran
Quick Share

விறல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் அத்தனை படங்களும் சரித்திர வெற்றி படைத்தது என்றல் எது இயக்குனர் வெற்றிமாறனின் திரைப்படங்கள் தான். பொல்லாதவன் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன்.

தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவக்கதைகள் உள்ளிட்ட படங்களை இயக்கினார். சமீபத்தில் இவர் இயக்கி வெளியான திரைப்படம் தான் விடுதலை. ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவான இப்படத்தில் காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து கவனத்தை ஈர்த்துள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்து வருகிறது.

வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குனர்கள் காமெடி நடிகர்களை வைத்து படம் எடுக்கவே யோசிப்பார்கள். ஆனால் வெற்றிமாறன் சூரி மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை இயக்கினார். அதேபோல் சூரியும் கான்ஸ்டபிள் வேடம் என்பதை அலட்சியப்படுத்தாமல் வெற்றி தன் மீது வைத்த நம்பிக்கைக்காக தன்னை ஒவ்வொரு காட்சியிலும் மெருகேற்றி நடித்திருந்தார்.

தமிழ் திரை ரசிகர்களால் மிகச்சிறந்த படைப்பாளியாக பார்க்கப்படும் வெற்றிமாறன் தற்போது நயன்தாரா நடிப்பில் அண்மையில் வெளிவந்த அன்னப்பூரணி திரைப்படத்தை விமர்சித்து ட்விட் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அன்னபூரணி திரைப்படம் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துகிறது என சர்ச்சை எழுந்ததை அடுத்து அப்படத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஓடிடியில் இருந்து நீக்கியது.

இது குறித்து வெற்றிமாறன் பதிவிட்டுள்ளதாவது, ஒரு திரைப்படத்தை அனுமதிப்பதற்கும், மறுப்பதற்கும் சென்சார் குழுவுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. ஓடிடியில் இருந்து படத்தை நீக்கியது சினிமா துறைக்கு நல்லதல்ல என இயக்குனர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்து இருந்தார். வெற்றிமாறனின் இந்த கருத்தை விமர்சித்துள்ள பிரபல இயக்குனர் பேரரசு, “வெற்றிமாறனின் கருத்தை வரவேற்கிறேன்!

ஆனால், இதே கருத்தை கேரளா ஸ்டோரி படத்தின் போது தெரிவித்திருந்தால் அவரது சினிமா பற்று உண்மை என்பது உறுதியாகியிருக்கும். அன்னப்பூரணி படத்திற்கு மட்டும் தெரிவிக்கும்போது அவரின் குறிப்பிட்ட ஜாதி வெறுப்பு தான் வெளிப்படுகிறது. தயவுசெய்து திரைப்பட பற்றாளனாய் இருங்கள் வெற்றிமாறன்!” என பேரரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.

Views: - 193

0

0