கெடச்ச வாய்ப்பை அலட்சியப்படுத்திய இவானா… “GOAT” விஜய்க்கு தங்கையாக நடிக்கப்போறது இவங்க தான்!

Author: Rajesh
19 February 2024, 4:54 pm
ivana vijay
Quick Share

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் .இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.

பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். ஆம், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. அதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என்பதை தெரியப்படுத்தினர். இப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கவுள்ளதாக முன்னர் வெளியான செய்திகள் கூறியது. இதில் லைலா இருப்பதால் ஒருவேளை அப்பா விஜய்க்கு ஜோடியாக லைலா நடிக்கிறாரோ? அப்போ சினேகா எந்த ரோலில் நடிக்கிறார் என குழப்பங்கள் ஏற்பட்டது.

ரசிகர்கள் ஆளாளுக்கு இப்படி யூகித்து வரும் நிலையில் தற்போது Goat படத்தை குறித்த ஒரு லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது. அதாவது, படத்தில் விஜய்க்கு தங்கையாக பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள் அபியுக்தா மணிகண்டன் என்பவர் நடிக்கிறாராம். இது தான் அவருக்கு அறிமுக படம். இதற்கு முன்னர் விஜய்யின் தங்கையாக நடிக்க லவ் டுடே புகழ் இவானாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், தான் ஹீரோயினாக புகழ் பெற்றிருக்கும் நேரத்தில் தங்கை ரோலில் நடித்தால் அடுத்தடுத்து அது போன்ற வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கும் என்பதால் வேண்டாம் என கூறி நிராகரித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 221

0

0