அடுத்த டார்கெட் SUPER STAR… கனவு மற்றும் ஆசை குறித்து சூசகமாக தெரிவித்த தனுஷ்..!

Author: Vignesh
24 May 2024, 2:29 pm

தமிழ் திரை உலகில் பலரும் தன்னை அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக நினைத்துக் கொண்டு கனவில் வாழ்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் நடிகர் மற்றும் இயக்குனரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனமான தனுஷ் தன்னுடைய கனவை பற்றி வெளிப்படையாக மேடையில், பேசி இருந்தார்.

rajini-dhanush

மேலும் படிக்க: கொஞ்ச நேரம் சும்மா இரு.. Disturb ஆகுதுல கோவத்தில் கடுப்பான அமலா பால்.. வைரலாகும் வீடியோ..!

நடிகர் தனுஷ் தற்போது, தனது ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தில் சன் நிறுவனம் தயாரிப்பில் நடித்த வருகிறார். ராயன் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க இயக்குனர் அவதாரம் எடுத்து தனுஷ் இயக்குகிறார். ராயன் திரைப்படத்திலிருந்து வெளியான அடங்காத அசுரன் பாடல் இணையமெங்கும் வைரலாகி வருகிறது. தன்னுடைய இரண்டு கனவுகளை பற்றியும் அதில் ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்தும் சூசகமாக பேசி உள்ளார்.

rajini-dhanush

மேலும் படிக்க: பேருக்கு மகன்.. போதை விருந்தில் சீரழிகிறான்.. விஜய் குறித்து பொது மேடையில் புலம்பிய தந்தை SAC..!

ஒரு நிகழ்ச்சியில், பேசிய நடிகர் தனுஷ் சிறு வயது முதல் நான் இளையராஜாவாக நடிக்க வேண்டும் என்று நினைத்து அதற்காக பயிற்சிகள் எடுத்துக் கொண்டேன். இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் தவம் கிடந்தேன். இப்போது, அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. வாழ்க்கை வரலாறு படம் என்றால் நான் இருவரது வாழ்க்கையை படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒன்று இளையராஜா இன்னொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று கூறியுள்ளார். தனுஷின் இந்த பேச்சு இணையதளத்தில் வைரலாகிவரும் நிலையில், இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு படத்திற்கு தனுஷ் அடி போடுகிறார் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?