பேருக்கு மகன்.. போதை விருந்தில் சீரழிகிறான்.. விஜய் குறித்து பொது மேடையில் புலம்பிய தந்தை SAC..! (Video)

Author: Vignesh
24 May 2024, 1:49 pm
vijay
Quick Share

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் நடிகர் நடிகைகளிடம் போதைப்பொருள் கலாச்சாரம் பரவி வரும் நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய பிறந்த நாட்களில் சக நடிகர், நடிகைகளுடன் போதை விருந்தில் ஈடுபடுவது பற்றி அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vijay

மேலும் படிக்க: குடும்பத்தில் வெடித்த பிரச்சனை?.. தினமும் சண்டை போடும் கணவர்.. பகீர் கிளப்பிய காஜல் அகர்வால்..!

சில வருடங்களாக நடிகர் விஜய் அவர்களுக்கும் அவருடைய தந்தைக்கும் இடையே முகம் கொடுத்து பேசிக்கொள்ளாத அளவிற்கு பனிப்போர் நிலவி வருகிறது. ஆனாலும், விஜய் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது கட்சிப் பணிகளிலும் தனது அடுத்தடுத்த திரைப்படங்களிலும் பணியாற்றி வருகிறார். தற்போது, விஜய் கோட்திரைப்படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார்.

vijay

மேலும் படிக்க: அர்ஜென்ட்டா வந்துடுச்சு.. அங்க பாத்ரூம் கூட இல்லை ஷாக் கொடுத்த காஜல் அகர்வால்..!

இந்த திரைப்படம் தற்போது, இறுதிக்கட்டத் பணியிலும் இருக்கிறது. இந்த நிலையில், வீர லக்ஷ்மியின் தமிழக முன்னேற்ற கழகம் சார்பில் நடிகர் விஜய் மீதும், நடிகர் தனுஷ் மீதும், நடிகை திரிஷா மீதும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக புகார் கொடுக்ககப்பட்டு உள்ளது. மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை காவல்துறையில் புகாராக அளிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் பேசியுள்ள காணொளி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வைரலாகி வருகிறது.

vijay sac-updatenews360

மேலும் படிக்க: எனக்கு அப்பவே தெரியும் MACHI.. RCB-யை கலாய்த்து நடிகர் ஜீவா வெளியிட்ட பதிவு..!

அந்த வீடியோவில், விஜய்யின் தந்தை SAC பேசுகையில், என் பிள்ளையை நானும் அப்படித்தான் வளர்த்து வச்சிருக்கேன். உனக்கு பிறந்த நாளா கொண்டாட்டம் எல்லாம் வேண்டாம் பா.. அந்த பிறந்த நாளில் ஏதாவது, நல்லது பண்ண முடியுமா?… 400 இடத்தில ஏதாவது நல்லது நடக்குமா? குறைஞ்சது ஒரு லட்சம் ஏழைக்கு, தமிழ்நாடு முழுவதும் உன் ரசிகர்களை வைத்து ஏழைகளுக்கு ஏதாவது நல்லதை செய்ய சொல்லு, நண்பர்களை கூப்பிட்டு தண்ணி அடிப்பது பிறந்தநாள் இல்லை. உண்மையான பிறந்த நாள் என்றால், உன்னால் மற்றவர்கள் பயன் அடைய வேண்டும் என்று அந்த வீடியோவில் விஜய்யின் தந்தை SAC பேசி இருப்பது ரசிகர்கள் மட்டுமல்லாது பலரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

விஜயின் அரசியல் வருகையின் ஆரம்ப சமயத்தில் SAC இப்படி பேசி இருப்பது விஜய் குறித்தும், அவரின் அரசியல் வருகை குறித்தும் பலரிடையே விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. விஜய் பேருக்கு தான் மகன் மற்றபடி அவரால் SAC -க்கு எந்த ஒரு நிம்மதியும் இல்லை என்று பலரும் கருத்துக்களில் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 100

0

0