நடிகர் குணால் நினைவு நாள்: முதல் படமே மெகாஹிட்… வளர்ந்து வந்த வேகத்தில் உயிரை பறித்த காதல்!

Author: Rajesh
7 February 2024, 12:14 pm
Actor kunal
Quick Share

முதல் படமே மாபெரும் ஹிட் அடித்து அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் குணால். 1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளிவந்த “காதலர் தினம்” திரைப்படம் தான் இவரின் முதல் படம். இப்படத்தில் நடிகர் குணால், இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே, நாசர், கவுண்டமணி போன்ற பலரும் நடித்தனர். வருடங்கள் பல கடந்தாலும் இன்றும் காதலர்களின் பேவரைட் திரைப்படமாக இருக்கிறது இப்படம்.

இப்படத்தின் ஹீரோவான நடிகர் குணால் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடல் ஆக விளம்பரங்களில் நடித்து வந்தார். அதன் மூலம் கிடைத்தது தான் திரைப்பட வாய்ப்பு. தமிழ் தவிர இந்தி படங்களிலும் குணால் நடித்தார். “தில் ஹை தில் மெய்ன்” என்ற படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். முதல் திரைப்படத்திலே ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக பிற்காலத்தில் வலம் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சமயத்தில் குணால் தற்கொலை செய்துக்கொண்டு இறந்துவிட்டார்.

ஆம் கடந்த 2008ம் ஆண்டு மும்பாயில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். குணால் மும்பையை சேர்ந்த அனுராதா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். குணால் சினிமாவில் அறிமுகம் ஆன பின் நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டதால் அவரின் மனைவி அனுராதாவுக்கும் அவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

ஒரு நாள் மனைவி அனுராதா குணால் உடன் சண்டைபோட்டுவிட்டு வீட்டை விட்டு சென்றதால் குணம் மனமுடைந்த மும்பையில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டு இறந்துவிட்டார். குணால் இந்தி நடிகை லவினா பாட்டியாவை ரகசியமாக காதலித்து நிச்சயம் செய்துக்கொண்டதோடு திருமணம் செய்யவும் இருந்தார். பின் விசாரணையில் அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.

மறைந்தும் 90 ரசிகர்களின் மறக்கமுடியாக நடிகராக இருந்து வரும் நடிகர் குணாலின் 16ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. குணாலின் மரணம் இன்று வரை மர்மமாக இருந்தாலும் காதலர் தினம் வாழும் வரை அவரின் நினைவுகள் என்றென்றும் வாழும்.

Views: - 245

1

0