அந்த ஒரு கேள்வி.. சுக்குநூறாக நொறுங்கிப் போன நெப்போலியன்.. அரசியல், சினிமாவை ஒதுக்கி வைக்க இதுதான் காரணமாம்..!

Author: Vignesh
2 January 2024, 6:15 pm
Napoleon-Family
Quick Share

நெப்போலியன் 1991ம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலம் அறிமுகமானவர். ஆறடிக்கும் மேல் உயரம், கம்பீரமான ராஜநடை, முறுக்கு மீசை என பக்கா கிராமத்து மெட்டீரியலாக திரையுலகில் அறிமுகமான நெப்போலியன், போலீஸ் கேரக்டர்களுக்கும் அம்சமாக பொருந்திப் போனார்.

nepolian

நெப்போலியன் ஹீரோ, வில்லன் கெஸ்ட் ரோல் என வலம் வந்த ரஜினியுடன் எஜமான் படத்தில் நடித்திருந்தார். நெப்போலியனுக்கு கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா போன்ற படங்கள் தரமான கம்பேக் கொடுத்தன. அதேபோல், நெப்போலியன் கமலுடன் விருமாண்டி, தசாவதாரம் படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

இறுதியாக கார்த்தியுடன் நடித்த சுல்தான் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனிடையே சினிமா, அரசியல் என பயணித்துக் கொண்டிருந்த நெப்போலியன், ‘ஜீவன் டெக்னாலஜிஸ்’ என்ற பெயரில் ஐடி நிறுவனமும் நடத்தி வருகிறார். நெப்போலியனின் ஐடி நிறுவனம் சென்னை, அமெரிக்கா என இரு இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. நெப்போலியன் தனது மகன் தனுஷின் உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் சென்று செட்டில் ஆனார்.

nepolian

பல வருடங்களாகவே அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியனின் வீட்டிற்கு யூடியூப் பிரபலம் இர்பான் அவரின் வீட்டிற்கு சென்று வீடியோ வெளியிட்டதில் அனைவருக்கும் தெரியவந்தது. இந்நிலையில் சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடிய நெப்போலியனுக்கு நடிகை குஷ்பு, மீனா உள்ளிட்டோர் அமெரிக்கா சென்று அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர். அவர்களுடன் நெப்போலியனின் வெளிநாட்டு நண்பர்கள் கூட கலந்துக்கொண்டனர்.

நெப்போலியன் தன்னுடைய பிறந்தநாள் மட்டும் அல்லாது தன்னுடைய மனையின் 51ஆவது பிறந்தநாளையும் வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நெப்போலியன் அமெரிக்காவில் சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பித்து மகனுக்காக எல்லாவற்றையும் செய்தோம். அப்போது, என் மகன் ஒரு கேள்வி கேட்டன்.

அப்பா இனிமேலும் நான் இப்படி தனியா தான் இருக்கணுமா திரும்பவும் அப்பா இல்லாமல் இருக்கணுமா என்று கேட்டான். அங்கே ( இந்தியா ) எனக்கு வேண்டாம். எல்லோரும் வீல் சேரில் இருப்பதை ஒரு மாதிரி பார்க்கிறார்கள் இங்கே (அமெரிக்கா) அப்படி யாரும் பார்க்கவில்லை என்று கூறியதும், அப்போது, அரசியல் எல்லாத்தையும் ஒதுக்கி விட்டு அமெரிக்காவுக்கே சென்று விட்டேன். இந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை என்று நடிகர் நெப்போலியன் கண்ணீருடன் பதில் அளித்து இருக்கிறார்.

Views: - 281

0

0