விஜய், அஜித்தை பின்னுக்கு தள்ளிய அல்லு அர்ஜுன்.?

Author: Rajesh
4 February 2022, 3:50 pm
Quick Share

தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான பிரமாண்ட திரைப்படம் தான் புஷ்பா. இந்த திரைப்படத்தில் பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தும் இன்று வரை பட்டைய கிளப்பி வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை யாரையும் விட்டு வைக்காத படம் தான் இது.இப்படம் வெளியானதில் இருந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே இப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ள நிலையில் இதன் மொத்த வசூல் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தப்படம் மொத்தம் ரூ.365 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் புஷ்பா திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலே அதிகம் வசூல் செய்த திரைப்படமாக மாறியுள்ளது. இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் முக்கிய முன்னணி நடிகர்களான விஜய். அஜித்தை விட அதிக வசூல் செய்த படமாகவும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 736

3

2