கண்ணு ரெண்டும் காந்தம் மாதிரி கட்டி இழுக்குது கவர்ச்சியில் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் லக்ஷ்மி மேனன் !!

Author: kavin kumar
4 February 2022, 3:26 pm
Lakshmi Menon_Actress
Quick Share

நடிகை லட்சுமி மேனன் ( Lakshmi Menon ) தமிழ் மற்றும் மலையாள திரை பட நடிகை ஆவார் . இவர் தமிழில் ஒரு பாடலும் பாடியுள்ளார் . இவர் மலையாளத்தில் ” ரகுவிண்டெ சுவந்தம் ரசியா ” திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . அதை தொடர்ந்து தமிழில் “சுந்தர பாண்டியன்” படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களுக்கு கதாநாயகியாக அறிமுகமானார் .

நடிகை லட்சுமி மேனனுக்கு முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான, “பிலிம் பேர் விருது”, “தமிழ் நாடு ஸ்டேட் அவார்டு”, ஆகிய விருதுகள் கிடைத்தது . ஒரு புறம் நடிப்பிலும் ஒரு பக்கம் படிப்பிலும் என மாறி மாறி கவனம் செலுத்தி வந்தார்.

தமிழில் நடிகை லட்சுமி மேனனுக்கு மக்களிடையே நல்ல வரவெப்பு இருந்தது .தொடர்ந்து “கும்கி”,”குட்டிப் புலி”,”மஞ்சப்பை”, “பாண்டிய நாடு”,”நான் சிகப்பு மனிதன் “,”ஜிகர்தண்டா”, போன்ற ஹிட் படங்களில் நடித்தார். என்ன தான் நடிகை லட்சுமி மேனன் நல்ல படங்களில் நடித்திருந்தாலும் .படத்திற்கு படம் எடை கூடிக்கொண்டே போக பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் சினிமாவில் இருந்து ஒரு கூட்டு பிரேக் எடுத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த துடங்கிவிட்டார்.

ஒருவழியாக படிப்பை முடித்துவிட்டு தன எடையையும் குறைத்து விட்டு ஒரு புது லுக்கில் போட்டோக்களை பகிர்ந்து சினிமா ரசிகர்களை ஆச்சர்யபடுத்தினார் நடிகை லட்சுமி மேனன் .கிட்ட தட்ட 4 வருடங்கள் கழித்து ” புலிக்குத்தி பாண்டி” படத்தில் நடிகர் “விக்ரம்பிரபுவிற்கு” ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ஏதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை சுமாரான விமர்சனத்தையே பெற்றிருந்தது.

தற்போது திருமண வயதை எட்டியுள்ள நடிகை லட்சுமி மேனனுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க தாயாராகி வருவதாகவும் செய்திகள் வளம் வருகிறது .சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் லட்சுமி மேனனிடம் ரசிகர் ஒருவர் “நீங்கள்” Single ah ” என கேட்க ” அதற்க்கு அவர், வெட்கப்படும் பெண்ணின், எமோஜியுடன் இல்லை என பதிலளித்துள்ளார். இதில் இருந்து லட்சுமி மேனன் யாரோ ஒருவரை காதலிப்பது தெரிய வந்துள்ளது.

தற்போது மாடர்ன் உடையில் நடிகை லட்சுமி மேனன் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துள்ளார் . லட்சுமி மேனனின் இந்த மாடர்ன் டிரஸ் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் வலிந்து வருகின்றனர்.

Views: - 1104

3

2