‘தளபதி’ பட சூட்டிங்கிற்கு நடுவே கமலுக்கு போன் செய்தேன்… மேடையில் பேசிய ரஜினிகாந்த்… கலகலப்பான அரங்கம்..!!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
7 September 2022, 11:40 am

பொன்னியின் செல்வன் பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், மணி ரத்னம் இயக்கத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மணிரத்னத்துடன் தளபதி படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசியதாவது :- தளபதியில் நடிக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டேன். அதிர்ச்சி, சந்தோஷம் என உள்ளிட்டவற்றிற்கு நான் வழக்கமான ஆக்‌ஷன் வைத்துள்ளேன். ஆனால் பீல் பண்ணுங்க பீல் பண்ணுங்க என்று கூறுகிறார். எனக்கு ஒன்னும் புரியவில்லை.

10 ஷாட் 12 ஷாட் போகிறது. நான் உடனே கமல்ஹாசனுக்கு போன் செய்துகேட்டேன். சிரித்தார் எனக்கு தெரியும் என சொன்னார். அதன் பின் நான் ஒன்று கூறுகிறேன் என ஒரு ஐடியா கொடுத்தார். அவரை நடித்துக்காட்ட சொல்லுங்கள், அத கவனிப்பதுப்போல் பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் யோசியுங்கள், அதன் பின் நடியுங்கள் என்றார். நானும் தம் அடித்துக்கொண்ட அவர் சொன்னதுபோல் செய்தேன். அதன்பின் நடித்தேன், உடனே ஓகே என சொல்லிவிட்டார். நாங்கள் இருவரும் அவரை ஏமாற்றியுள்ளோம், என நகைச்சுவையாக பேசினார்.

  • the reason behind rj balaji changed his name as rjb அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?