விலையுயர்ந்த ஆவணங்களை ஓபிஎஸ் திருடியதாக வழக்கு ; அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை..!

Author: Babu Lakshmanan
7 September 2022, 1:35 pm
Quick Share

சென்னை : விலையுயர்ந்த ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் திருடியதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். அப்போது, அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது. அந்த சமயம், அதிமுக அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை ஓபிஎஸ் தரப்பினர் எடுத்துச் சென்ற வீடியோக காட்சிகள் வெளியாகியது.

இதைத் தொடர்ந்து, அதிமுக அலுவலகத்திற்கு அடியாட்களுடன் புகுந்து, கட்சியின் முக்கிய ஆவணங்களையும், பொருட்களையும் திருடியதாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது இபிஎஸ் தரப்பை சார்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் பெயரில் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், புகார் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று டிஜிபிக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் நேற்றைய தினம் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், இன்று டிஜிபி வெங்கடேசன் தலைமையிலான ஒரு டிஎஸ்பி மூன்று ஆய்வாளர்கள் அடங்கிய சிபிசிஐடி அதிகாரிகள், அதிமுக அலுவலகம் விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். 70 காவலர்கள் அதிமுக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 362

0

0