சால்வையை தெரிஞ்சு கொடுத்தது அவர் தவறு.. நான் வீசியதும் தவறு : பின்வாங்கினார் நடிகர் சிவக்குமார்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2024, 9:42 pm
sivakumar
Quick Share

சால்வையை தெரிஞ்சு கொடுத்தது அவர் தவறு.. நான் வீசியதும் தவறு : பின்வாங்கினார் நடிகர் சிவக்குமார்!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் மற்றும் பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் திடீரென மேடையில் இருந்து பேசும்போது, குடிநீருக்காக போராடியது, உண்ணாவிரதம் இருந்தது குறித்து பேசி, பழ.கருப்பையாவின் காலில் விழுந்து வணங்கி மீண்டும் பேச ஆரம்பித்தார். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து நிகழ்ச்சி முடிவில் வயதான ரசிகர் ஒருவர், சிவகுமாருக்கு பொன்னாடையை அணிவித்து வாழ்த்து தெரிவிக்க முயன்றார். அப்பொழுது அதை தடுத்து நிறுத்திய சிவகுமார், பொன்னாடையை பிடுங்கி தூக்கி வீசி விட்டு சென்றார். இதனால் அந்த வயதான முதியவர் மனவேதனை அடைந்தார்.

சால்வை அணிய வந்தவரை நோகடிக்கும் விதமாக, நடிகர் சிவகுமார் நடந்து கொண்டது நியாயமா..? என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

இது பேசுபொருளான நிலையில், சால்வையை தூக்கியெறிந்த நிகழ்வுக்கு நடிகர் சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார். அதாவது தனக்கு சால்வை தந்த நபரான கரீமுடன் இணைந்து சிவக்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில்,மீடியா நண்பர்களுக்கு வணக்கம். இப்போது காரைக்குடி சால்வை மேட்டரை பார்த்து இருப்பீர்கள். அவர் யாரோ எவரோ அல்ல. எனது தம்பி. 50 ஆண்டு கால நண்பர். 1971ல் மன்னார்குடியில் உள்ள நாடகத்துக்கு தலைமை தாங்க போய் இருந்தேன். 1974ல் எனது கல்யாணத்துக்கு வந்திருந்தார். அவரது கல்யாணத்தை நான் தான் செய்து வைத்தேன். இவரது கல்யாணத்தை மட்டும் நான் நடத்தி வைக்கவில்லை.

அவரது மகள் கல்யாணத்துக்கு போய் உள்ளேன். பேரன் கல்யாணத்துக்கும் போய் இருக்கிறேன். பொதுவாக நிகழ்ச்சிகளில் எனக்கு யாராவது சால்வை போர்த்த வந்தால் அதனை திருப்பி அவர்களுக்கே போர்த்தி விடுவேன். சால்வை போர்த்தும் பழக்கம் எனக்கு கிடையாது. நிகழ்ச்சியில் 7 முதல் 8 பேர் பேசிய நிலையில் கடைசியாக நான் பேசினேன். ரொம்ப சோர்வாக இருந்தது.

கிளம்பி கீழே வந்தபோது எனக்கு சால்வை அணிவிப்பது பிடிக்காது என தெரிந்தே கரீம் கையில் சால்வை வைத்திருந்தார். தெரிந்து கொண்டே சால்வையை எடுத்து வந்தது அவரது தவறு. பொது இடத்தில் சால்வையை வாங்கி கீழே போட்டது என்ற முறையில் நான் செய்ததும் தப்புத்தான். I Feel Sorry.. அதற்காக நான் ரொம்ப வருத்தப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Views: - 118

0

0