ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் விஜய்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Author: Rajesh
3 February 2023, 2:24 pm
RAjini kanth -Updatenews360
Quick Share

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

Rajinikanth_Updatenews360

70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை தொடர்ந்து, மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் ரஜினி நடிக்கவுள்ளார்.

Vijay Ileana - Updatenews360

இந்நிலையில், ரஜினி படத்தில் விஜய் நடித்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் என்பதை அனைவரும் அறிவோம். இதனை பலமுறை விஜய் பல மேடையில் கூறியுள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்தின் சூப்பர்ஹிட் திரைப்படம் ஒன்றில் விஜய் நடித்துள்ளார்.

விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனரான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1985ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் நான் சிகப்பு மனிதன். அப்படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றில் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பலரும் இதனை கவனித்திருக்க வாய்ப்பில்லை. இதனால், தற்போது விஜய் தோன்றிய அந்த காட்சி வீடியோவை ரசிகர்கள் சமுக வலைத்தளத்தில் செய்து வருகின்றனர்.

Views: - 478

0

0