அமைதிப்படை சத்தியராஜ் ஹேர் ஸ்டைலில் கஸ்தூரியின் மகன்.. பெரிய பையனா வளர்ந்துட்டாரே..!
Author: Vignesh11 August 2023, 5:00 pm
சர்ச்சைக்குரிய மற்றும் கவர்ச்சி நடிகையான கஸ்தூரி 90களில் நடித்து பேமஸ் ஆனார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1992 ‘மிஸ் மெட்ராஸ்’ அழகிப் போட்டியில் கலந்துக்கொண்டு வென்றுள்ளார். பின்னர் முதல் ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நடித்து அறிமுகமாகி ராசாத்தி வரும் நாள் , சின்னவர் , செந்தமிழ்ப் பாட்டு , அமைதிப்படை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 48 வயதாகும் கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துக்கொண்டார். இவர் 2000 ஆம் ஆண்டு ரவிகுமார் என்ற மருத்துவரை திருமணம் செய்தார். திருமணமாகியதும் கணவர் வெளிநாட்டில் வேலையை பார்த்து வருகிறார்.
இருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். இரு பிள்ளைகளும் அமெரிக்காவில் படித்து வரும் நிலையில், கஸ்தூரி மாதம் ஒருமுறை பிள்ளைகளை சந்தித்தும் வருகிறார்.
தற்போது மகன் எடுத்த ஒரு வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோவை பார்த்தவர்கள் கஸ்தூரி மகனா இது இப்படி வளர்ந்துட்டாரே, அமைதிப்படை சத்தியராஜ் ஹேர் ஸ்டைலில் இருக்கிறார் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.