45 வயதில் இப்படி ஒரு டான்ஸ்..? நடிகை மீனாவுடன் விஜய்யின் முன்னாள் காதலி: வைரல் வீடியோ..!

Author: Rajesh
19 February 2023, 12:30 pm

90ஸ்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சங்கவி. 1993ல் வெளியான அமராவதி படத்தில் நடிகர் அஜித் ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய சங்கவி, விஜய்யின் ரசிகன் படத்திலும் நடித்தார்.

ஆரம்பகாலக்கட்டங்களிலேயே இரு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த சங்கவி, விஜய்யுடன் விஷ்ணு, கோயம்பத்தூர் மாப்பிள்ளை, நிலாவே வா போன்ற படங்களில் நடித்துள்ளார். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் இருப்பதாகவும் அதை அவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகர் இதனை அறிந்து மிரட்டியதாகவும் பல தகவல்கள் வெளியானது.

meena - updatenews360 3

அதன்பின், 2005ல் சங்கவிக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக 2008க்கு பின் சினிமாவில் இருந்து விலகி உடல் நலனை கவனித்து வந்தார். 2016ல் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து சமீபத்தில் சான்வி என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

actresssangavi-Updatenews360

இந்நிலையில், நடிகை மீனாவுடன் ரீல்ஸ் வீடியோ செய்து அதனை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் சங்கவி. அந்த வீடியோவிற்கு லைக்குகள் மற்றும் கமெண்டுகள் குவிந்து வருகிறது.

  • kamal haasan not invited for waves 2025 கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!