போஸ் கொடுக்கும்போது நச்சுனு ஒரு இச் அடித்த கணவர் – வெட்கத்தில் சிரித்த ஸ்ரேயா சரண்(வீடியோ)

Author: Shree
12 November 2023, 1:50 pm
shreya saran
Quick Share

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் மூலம் அறிமுகமாகி பின்னர் மழை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக நடிக்க தொடங்கியவர நடிகை ஸ்ரேயா சரண். நல்ல அழகு துரு துரு நடிப்பு என அறிமுகமான புதிதிலே அத்தனை ரசிகர்களையும் வளைத்துவிட்டார்.

தெலுங்கு , தமிழ் , மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றுள்ளார். இதனிடையே திடீரென 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை காதலித்து ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது. தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர், கப்சா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது 40 வயதாகும் ஸ்ரேயா சரண் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து யங் ஹீரோயின் போன்று அழகு குறையாமல் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது கணவருடன் கவர்ச்சியாக சேலை அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார். அப்போது அங்கு ஜோடியாக சேர்ந்து போஸ் கொடுத்தபோது அவரது கணவர் ஸ்ரேயா சரண் கன்னத்தில் டக்குனு ஒரு முத்தம் கொடுத்த உடனே ஸ்ரேயா சரண் வெட்கத்தில் சிரித்தபடி பதிலுக்கு லிப்கிஸ் கொடுத்து தன் காதலை வெளிப்படுத்தினார். இந்த கியூட்டான ரொமான்டிக் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ:

Views: - 191

0

0