அதிதி ஷங்கரா இது? சின்ன வயசுல பப்ளி பேபி ஆக அடையாளமே தெரியாமல் இருக்காங்களே!

Author: Rajesh
13 January 2024, 3:27 pm
aditi shankar -updatenews360
Quick Share

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் உள்ள சில இயக்குனர்களில் முக்கியமான ஒருவர் இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கிய திரைப்படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

aditi shankar

மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடித்த திரைப்படம் விருமன். இயக்குனர் முத்தையா இயக்கிய இப்படத்தை நடிகை ஜோதிகாவும் சூர்யா 2D புரோடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்தார்கள்.

அதில் கிராமத்து பெண்ணாக நடித்து அதிதி அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால ‘ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது . அந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற “வண்ணாரப்பேட்டையில” என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பாடியிருந்தார்.

இந்த படமும் அவருக்கு நல்ல பிரபலத்தை கொடுத்து மார்க்கெட்டை மேலும் உயர்த்தியுள்ளது. அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வா தம்பி ஆகாஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்துவிட்டு ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். மேலும் சூர்யா 43 படத்திலும் நடிகை அதிதியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தொடர்ந்து இப்படி அடுத்தடுத்த திரைப்படங்களில் படு பிசியாக நடித்து வரும் அதிதி சங்கர் தற்போது குடும்பத்துடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாக… எல்லோரும் அதிதி ஷங்கரா இது? என ஷாக்காகி கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். அதில் பார்க்கவே மிகவும் பப்ளி லுக் அழகில் இருக்கும் அதிதி பார்த்து நெட்டிசன்ஸ் அவரா இவர்? என புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.

Views: - 259

0

0