கஜினி படத்தில் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது இவரா?.. – அவர் எடுத்த போட்டோ ஷுட்..!

Author: Vignesh
6 May 2024, 3:26 pm

2005 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கஜினி. இந்த படத்தில், சூர்யாவுடன் இணைந்து அசின் ஜோடியாக நடித்திருப்பார். வித்தியாசமான கதைகளத்தில் உருவான கஜினி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில், அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

ghajini

மேலும் படிக்க: அந்த நடிகையின் வாழ்க்கையை அழிச்சதே அஜித்?.. உடையை கழட்டி அத செய்ய சொல்லி டார்ச்சர்..!

இன்று வரை சூர்யாவின் சிறந்த நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்றாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. ஆனால், இப்படத்தில் முதன் முதலில் சஞ்சய் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது சூர்யா கிடையாது. முருகதாஸ் இப்படத்தை முதன் முதலில் அஜித்தை வைத்து தான் இயக்க திட்டமிட்டு இருந்தாராம். அதன் பின்னர், அஜித் அசின் இருவரையும் வைத்து ஃபோட்டோ ஷூட் நடத்தி சில காட்சிகளை எடுத்துள்ளார்.

ghajini

மேலும் படிக்க: காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு.. பீச்சில் வாணி போஜன் கொடுத்த HOT லுக்..!

மேலும், இப்படத்திற்கு முதலில் மிரட்டல் என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டதாம். ஆனால், சில காரணங்களால் படத்திலிருந்து அஜித் வெளியேற அவருக்கு பதிலாக சூர்யா ஹீரோவாக நடித்த கமிட்டாகியுள்ளார். அதன் பின்னர், படத்தின் தலைப்பு கஜினி என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அஜித் மற்றும் அசின் இருவரும் கஜினி படத்திற்காக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ghajini
ghajini
ghajini
ghajini
ghajini
  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?