ப்பாஹ் ஹீரோயின் லுக்கில் அம்சமா இருக்கும் அஜித் மகள் – வைரலாகும் புகைப்படம்!

Author: Shree
23 October 2023, 1:21 pm

முதலில் கொஞ்சம் தயங்கிய ஷாலினி பின்னர் தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து பின்னர் காதலிக்கு ஓகே சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் இளம் ஜோடிகளாக வலம் வந்தனர். அதன் பிறகு பெற்றோர் சம்மதத்தின் படி கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னோடியான காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தபோது முதலில் அஜித் காதலிக்க துவங்கி பின்னர் ப்ரோபோஸ் செய்துள்ளார்.

மகள் அனுஷ்கா டென்னிஸிலும் ஆத்விக் கால்பந்து விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர்கள். அவ்வப்போது அவர்கள் விளையாடும் புகைப்படங்கள் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். இந்நிலையில் தற்போது அஜித் மகள் அனுஷ்கா அம்மா ஷாலினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியிட அது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அனுஷ்கா மாடர்ன் உடையில் ஹீரோயின் போன்று இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

  • audience suppoting dna movie against blue sattai maran நீங்கள் முதலில் Shut Up பண்ணுங்க? DNA படத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறனை ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்!