கோடி கோடியா பணத்தை அள்ளிய ஏஆர் ரஹ்மான்… பண பேராசையால் தரம் கெட்டுப்போன பெயர்!

Author: Shree
14 September 2023, 4:14 pm
ar rahman
Quick Share

சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழரான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உலகளவில் புகழ்பெற்ற இசைக்லைஞராக திகழ்ந்து வருகிறார். இந்தி, தமிழ், மலையாளம் போன்ற மொழிப்படங்களில் பணியாற்றியுள்ள இவரது தந்தையும் இசையமைப்பாளர் தான்.

சிறுவயது முதலே இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால் அவருடைய தந்தையிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தெரிந்துக்கொண்டு பின்னர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார்.

மெல்லிய இசையால் முதல் படத்திலே ரசிகர்களை கட்டிப்போட்ட ஏஆர். ரஹ்மானுக்கு அப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுள்ள பற்று அளவுக்கடந்தவை. பொதுமேடையில் கூட இந்தி மொழியை பலமுறை நிராகரித்து இருக்கிறார்.

திரைப்படங்களுக்கு மட்டும் அல்லாமல் இசை கச்சேரிகள் நடத்தி அதன் மூலம் வருமானம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இது கடந்த சில ஆண்டுகளாகவே நடந்துவருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் ” மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு போதிய ஏற்பாடுகள் சரியாக செய்யாமல் ஆயிர கணக்கில் ஆன்லைனில் டிக்கெட் விற்று மக்களை அலைமோத செய்தனர். இதனால் அந்நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள் அனைவரும் ஏஆர் ரஹ்மானை கடுமையாக திட்டி தீர்த்த பேட்டிகள் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியை சரியான முறையில் முன்னேற்பாடு செய்யாததே இதற்கு முக்கிய காரணம் என செய்திகள் வெளியானதோடு ஏஆர் ரஹ்மானின் மகன் தான் இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு டிக்கெட் விலை ரூ. 10000, ரூ, 5000, ரூ.3000 ரூ.1000 என காசுக்கு தகுந்தாற்போல் விற்கப்பட்டது.

ஆனாலும் நிகழ்ச்சியை நின்று கூட பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் அலைமோதினர். இதற்கு ஏஆர் ரஹ்மான் பதில் சொல்லியே ஆகவேண்டும் என பலர் கொந்தளித்தனர். அவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. எதனை டிக்கெட் விற்றுள்ளது. எத்தனை பேர் வருவார்கள் என்ற எல்லா விவரமும் அவருக்கு தெரிந்திருக்கும். பணத்தின் பேராசைக்காக பெரிய ஜாம்பவான் இப்படி செய்வதா ? என எல்லோரும் குற்றம் சாட்டினர். இதனால் புகழ் உச்சத்தில் இருந்த அவர் பெயர் தரம்கெட்டுவிட்டது.

Views: - 178

0

0