பிரமாண்ட வீடு கட்டி வரும் அறந்தாங்கி நிஷா… வாயை பிளக்கும் ரசிகர்கள் : அவரே போட்ட HOME TOUR வீடியோ!!

Author: Babu Lakshmanan
31 January 2023, 5:04 pm

சின்னத்துரை பெண் காமெடியன்கள் என்பது அரிதான ஒன்றாகும். அப்படி இருந்தாலும், பல படங்களில் நடித்த பிறகே அந்த இடத்தை பிடிக்க முடியும். ஆனால், சின்னத்திரையின் மூலம் குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம்பிடித்தவர்தான் அறந்தாங்கி நிஷா.

இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் காமெடி நிகழ்ச்சியில் பல ஆண் போட்டியாளர்களுக்கு மத்தியில் தனது பேச்சாற்றல் மற்றும் டைமிங்கில் பஞ்ச் டையலாக் போன்றவற்றால் பிரபலமானார். இந்த நிலையில் தான் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும், தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டிய நிஷா, தற்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார்.

மேலும், இவர் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார். அதில், அர்ச்சனா மற்றும் நிஷா செய்த அன்பு பஞ்சாயத்து பலரையும் காண்டாக்கியது. இதை பல்வேறு மீம் கிரியேட்டர்களும் கலாய்த்து இருந்தனர். அதே போல அர்ச்சனா உள்ளே இருந்த போது நிஷாவிடம் அன்பு ஜெய்க்கும்னு நம்புறயா என்று ஆவேசமாக கேட்ட வீடியோ கூட தற்போது வரை Toll-க்கு பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது, தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து வரும் அறந்தாங்கி நிஷா, புது பங்களா வாங்கியதாக தகவல் பரவியது. இதனை மறுத்து விளக்கம் கொடுத்த நிஷா, அது எப்படிப்பா எனக்கே தெரியாம நான் பங்களா கட்டுவேன், பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்த சொல்லுங்கப்பா என்று கூறியிருந்தார். மேலும், இது வதந்தி தான், ஆனா முயற்சி செஞ்சா முடியாதது எதுவுமே இல்ல சீக்கிரமா இப்படி ஒரு பங்களா கட்டுவோம்… சத்தியமா சொல்றேன் இது என் வீடு இல்லங்கோ, என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் கருப்பு ரோஜா என்ற யூடியூபில் சேனல் ஒன்றை நடத்தி வரும் அறந்தாங்கி நிஷா தான் புதிய வீடு கட்டி வரும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் நிஷா கூறியதாவது ” தான் சம்பாதித்து சிறுக சிறுக சேமித்த பணத்தை வைத்து வீடு கட்டி வருவதாகவும், விரைவில் அந்த பணி நிறைவடையும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் வீடு முழுவதும் கட்டி முடித்த பின்னர் உடனே அடுத்த வீடியோ வெளியிடப்படும் என்று அந்த விடியோவில் நிஷா அறிவித்துள்ளார். இதனை பார்க்கும் அவரது ரசிகர்கள் நீங்கள் சொன்னது போல செய்துவிட்டீர்கள் எனக் கூறி, வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?