மரணத்தை முன்பே அறிந்த விஜயகாந்த்.. உண்மையை உடைத்த பிரபலம்..!

Author: Vignesh
1 January 2024, 11:47 am
vijayakanth-death-2
Quick Share

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.

இந்நிலையில், விஜயகாந்தின் இறப்பு தன்னை பாதித்ததாக பத்திரிகையாளர் பயில்வான் வெளிப்படுத்தியுள்ளார். அவர் நேர்காணல் ஒன்றில் கூறுகையில், பல நடிகர்கள் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள். அதில், கேப்டனும் ஒருவராக இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது என்றும், தன்னுடைய இறப்பை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கேப்டன் தன்னுடைய மனைவியை கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்து விட்டார். அதுதான் நமக்கு தெரிந்த தகவல்.

இப்போது உள்ள சூழ்நிலையில், பிரேமலதாவை அவ்வாறு ஏற்றுக் கொள்வது தொண்டர்களுக்கு, கடினமாக தான் இருக்கும். அதனால்தான், விஜயகாந்த் அவரின் இறுதிப் பயணத்தை தொடங்குவதற்கு முன்பே அரசியல் பயணத்தில் தன் மனைவியை ஒரு பொறுப்பான பதவியில் வைத்து விட்டு சென்றிருக்கிறார். அப்படித்தான் நாம் நினைக்க முடியும் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

Views: - 444

0

0