உனக்கு வரலையா மூடிட்டு உட்காரு… பிரதீப்பை வெளுத்து வாங்கிய நிக்சன் -பிக்பாஸ் Promo!
Author: Shree11 October 2023, 10:15 am
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இதனிடையே, முதல் நாளில் இருந்தே பிக் பாஸில் நிறைய டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனன்யா ராவ், பவா செல்லத்துரை என இரண்டுபேர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள்.
இதனிடையே, இன்று வந்துள்ள முதல் பிரமோவில் பிரதீப் நிக்சனுக்கு இடையில் கடுமையான சண்டை மற்றும் வாக்குவாதம் நடைபெறுகிறது. நிக்சன் பிரதீப்பை பார்த்து, ” உனக்கெல்லாம் பேசவே தகுதியில்லை நீ மூடிட்டு உட்காரு. உங்கிட்ட திறமையே இல்லை. நான் உழைச்சி, பாட்டுப்பாடி திறமையோடு உள்ள வந்திருக்கேன். என்ன பார்த்து தகுதி இல்லன்னு சொல்ல உனக்கு தகுதியே கிடையாது. முடிஞ்சா உன் திறமையை காட்டு… பாடி காட்டு.. ஆடி காட்டு… உனக்கு வரலையா மூடிட்டு உட்காரு என ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார்.
நிக்சனின் இந்த கோபம் நியாயமானது தான் என நெட்டிசன்ஸ் பலர் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். உண்மையில் நிக்சன் சொல்வது நியாயமான வார்த்தை. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கு நிக்சன் சிறந்த உதாரணம் என அவரை ஆடியன்ஸ் பாராட்டி தள்ளியுள்ளனர்.
1
0