ஊரே கழுவி ஊத்தும் மாயா.. தாய், தந்தை மற்றும் 3 சகோதரிகளை பார்த்துள்ளீர்களா..!

Author: Vignesh
13 December 2023, 12:15 pm
Maya-S.-Krishnan
Quick Share

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் கவனத்தை அதிகம் ஈர்த்தவர் மாயா S கிருஷ்ணன். போல்டான போட்டியாளராக ஆரம்பத்தில் இருந்தே தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்து வந்த மாயா குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

maya s krishnan- updatenews360

இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான “வானவில் வாழ்க்கை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு ரஜினியின் 2.o திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ஒரு விலை மாதுவாக நடித்தார். அந்த ரோல் ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தது.அத்தோடு அதிக அளவில் அவர் விமர்சிக்கவும்பட்டார்.

Maya-S.-Krishnan

தற்போது தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்திலும் இவர் ஒரு நல்ல கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். மேலும் விரைவில் வெளியாக உள்ள நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.

maya s krishnan- updatenews360

பிக்பாஸில் மக்கள் வெறுக்கத்தக்க போட்டியாளராக இருந்து வரும் மாயாவின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு மொத்தம் மூன்று சகோதரிகள் உள்ளனர். இந்நிலையில், மாயாவின் தாய், தந்தை மற்றும் மூன்று சகோதரிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் மாயாவின் அக்கா ஸ்வாகதா கிருஷ்ணனை ஒரு பாடகியாக பலருக்கும் தெரியும்.

Maya-S.-Krishnan
Maya-S.-Krishnan

Views: - 346

0

0