மூட்டை மூட்டையா குவிந்த காதல் கடிதங்கள்… 90ஸ் பெண்களின் கனவு புருஷனா வாழ்ந்த மாதவன்!

Author: Shree
19 July 2023, 3:44 pm

90ஸ் காலத்தில் முன்னனி நடிகராக இருந்தவர் மாதவன். இவர் இவர் 2000ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கிய மின்னலே என்ற திரைப்படத்திலும் மற்றும் டும் டும் டும் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால் , ரன் , அன்பே சிவம் , ஆய்த எழுத்து, இறுதிச்சுற்று , விக்ரம் வேதா போன்ற பல தமிழ் திரைப்படங்களிலும் மற்றும் இந்தியில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் மாதவன் முதலில் நடித்த அலைபாயுதே திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததால் அடுத்தது என்னவளே படத்தில் நடித்திருந்தார். அலைபாயுதே ஹிட் ஆன உடனே அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து தயாரிப்பாளர்கள் மாதவனை புக் செய்தார்கள்.

அவரது அழகும், நடிப்பும் குறிப்பாக பெண் ரசிகைகளை வெகுவாக கவர்ந்தது. அலைபாயுதே திரைப்படம் வெளியான சமயத்தில் ஷாலினி – மாதவனின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருந்தது. அப்படத்தை காண காதல் ஜோடிகள் திரையரங்கிற்கு படையெடுத்தார்கள் என்று பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும், பேசிய அவர்…. அலைபாயுதே திரைப்படம் வெளிவந்த சமயத்தில் நான் மாதவனை பேட்டி எடுக்க அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு வந்த ஒரு போஸ்ட் மேன், மாதவனுக்கு மூட்டை மூட்டையாக கடிதம் வந்து இருக்கு. என் ஒற்றை ஆளால் அனைத்தையும் கொண்டு வரமுடியவில்லை. உதவிக்கு யாரையாவது அனுப்புங்க என்று கேட்டார். உடனே மாதவன் தன் உதவியாளரிடம் காரை கொடுத்து அனுப்பினார்.

அதுமட்டும் அல்லாமல் வந்த கடிதம் அனைத்திற்கும் பதில் எழுதுவார். ஒரு கட்டத்தில் பதில் எழுத முடியாமல் உதவியாளர் வைத்து பதில் அத்தனைக்கும் பதில் கடிதங்கள் எழுதி அனுப்புவார். அந்த அளவிற்கு மாதவன் ரசிகர்களை மிகவும் நேசித்து அவர்களுக்கு தகுந்த மதிப்பும் மரியாதையும் கொடுக்கக்கூடிய ஒரு நல்ல கதாநாயகன் என மாதவன் குறித்து பெருமையாக பேசியுள்ளார் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 456

    0

    0