காந்தி பொறந்த மண்ணு டீக்கடையில நின்னு தின்னு பாரு பண்ணு.. ATM பட குட்டி பாப்பாவை நியாபகம் இருக்கா? (வீடியோ)

Author: Vignesh
15 March 2024, 1:20 pm
vijay ATM
Quick Share

2007 ஆம் ஆண்டு விஜய் இரட்டை வேடத்தில் நடித்த அழகிய தமிழ் மகன் திரைப்படம் பரதன் இயக்கத்தில் வெளியானது. இப்படத்திற்கு, ஏ ஆர் ரகுமான் இசையமைக்க நடிகை ஸ்ரேயா கதாநாயகியாக நடித்திருந்தார். அழகிய தமிழ் மகன் படம் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது.

vijay  ATM

இதில், விஜயுடன் ஒரு குட்டிக் குழந்தை நடித்திருந்தார். விஜய் மற்றும் அந்த குழந்தை இடம்பெறும் காட்சிகள் இப்போதும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. விஜய்யின் பக்கத்து வீட்டு குழந்தையான ரேணு என்ற கதாபாத்திரத்தில் அந்த குழந்தை நட்சத்திரமான நிவேதிதா நடித்திருந்தார். இவர் அபிதாவியை சேர்ந்தவர். இவர் மோகன்லால், ஜெயராம், திலீப் படங்களை குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

தமிழில் அழகிய தமிழ் மகன் என்ற படத்தில் மட்டுமே நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு படங்களில் நடிக்காத நிவேதிதா கேரள மாநில விருது உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். இந்தநிலையில், நிவேதிதாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

Views: - 65

0

0