செம்பி படத்தில் கிறிஸ்துவ மத பிரச்சாரம்? பத்திரிகையாளர் கேள்விக்கு பதிலளிக்க திணறிய இயக்குநர்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 December 2022, 8:41 pm

கும்கி, மைனா முதலான படங்களை இயக்கியுள்ள பிரபு சாலமன் இயக்கத்தில் ‘செம்பி’ உருவாகியுள்ளது. இதில் கோவை சரளா, தம்பி ராமையா, அஷ்வின் குமார், கு.ஞானசம்பந்தம் என பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நாளை வெளியாகும் செம்பி திரைப்படத்தின் செய்தியாளர்கள் காட்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை இணையதள செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த திரைப்படம் மூன்று இளைஞர்களால் பாலியல் வன்புறவு செய்யப்படும் 10 வயது சிறுமியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது.

அதிகாரம் அந்த சிறுமிக்கு எதிராக செயல்படும் நிலையில், சாதாரண ஒரு நபர் நியாயம் பெற்றுதருகிறார் என்ற வகையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் முடிவில் அன்பு குறித்து பைபிளில் இடம்பெறும் ஒரு வாசகத்தை பிரபு சாலமன் பதிவிட்டுள்ளார். அதில், உன்னிடத்தில் செலுத்தும் அன்பை பிறரிடத்தில் செலுத்து – இயேசு.

இதன் பின்பு செய்தியாளர்களிடம் அவர் படம் குறித்தும் படம் உருவாக்குதல் குறித்தும் பேசினார். அப்போது சில செய்தியாளர்கள் செம்பி கிருஸ்துவ மதப் பிரச்சாரத்தை வலியுறுத்தும் படமா என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பிரபு சாலமன் இது நான் கடைப்பிடிக்கும் விஷயம் என்று தெரிவித்தார். மேலும் கிருஸ்துவம் மதமே கிடையாது என்றும் கூறினார். அவரிடம் மீண்டும் ஒரு செய்தியாளர் உங்கள் படங்கள் தொடர்ந்து கிருஸ்துவ மதப் பிரச்சாரம் போல் உள்ளதே என கேள்வி எழுப்பிபார்.
அதற்கு மீண்டும் சொல்கிறேன், கிருஸ்துவம் மதம் கிடையாது. உங்களை காயப்படுத்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என்றார். ஆனால் அதற்கு மன்னிப்பு கேட்க தேவை இல்லை என அந்த செய்தியாளர்கள் கூறினர்.
இந்த சமயத்தில் செய்தியாளர்கள் மற்றும் பிரபு சாலமன் ஆகியோருக்கு கருத்தியல் ரீதியாக வாக்குவாதம் நடைபெற்றது. பிரபு சாலமன் தொடர்ந்து இது என்னுடைய கருத்து என்று தெரிவித்தார்.

  • Seenu Ramasamy divorce reasons இளம் நடிகைகளுக்கு குறி…இயக்குனர் “சீனு ராமசாமி” விவாகரத்தின் பின்னணி… பகிரங்கமாக பேசிய பயில்வான்..!
  • Views: - 537

    0

    0