Drink and Drive பண்ணாதே… ஷிவாங்கியை நடுரோட்டில் மடக்கி பிடித்து கூல் சுரேஷ் அட்வைஸ்!
Author: Shree26 July 2023, 12:20 pm
தமிழ் சினிமாவில் வில்லன், காமெடி என்று சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ஓரளவு பிரபலமாக இருந்தவர் கூல் சுரேஷ். நடிகர் சிம்புவின் நண்பராகவும், ரசிகராகவும் தன்னை காட்டிக் கொண்டார். வெந்து தணிந்தது காடு படத்தின் ப்ரோமோஷனுக்காக களம் இறங்கி வெந்து தணிந்தது காடு.. சிம்புக்கு வணக்கத்தை போடு என கூவு கூவுனு கூவி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
வெந்து தணிந்தது காடு படத்தின் பிரமோஷனில் ஆரம்பித்து தற்போது வரை திரையரங்குக்கு சென்று படத்தை பார்த்து கூல் சுரேஷ் விமர்சனத்தை தெரிவித்து வருகிறார். இதனால் அவர் பரஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ வெளியாகும்போதெல்லாம் பிரபலமாக பேசப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
வெந்து தணிந்தது காடு படத்திற்கு அவர் கொடுத்த ப்ரோமோஷன் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பல சேர்த்ததால் அப்படத்தின் தயாரிப்பளாரா ஐசரி கணேஷ் கூல் சுரேஷை நேரில் அழைத்து ஐ போன் ஒன்றை பரிசாக கொடுத்தார். அதுமட்டும் அல்லாமல் அவரது பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை தானே ஏற்றுக்கொள்கிறேன் என கூறி உறுதியளித்தார். இதனை கேட்டு கூல் சுரேஷ் மிகவும் எமோஷனலாகி ” ஐசரி கணேஷ்” என்னுடைய கடவுள் என கூறி நெகிழ்ந்தார்.
இந்நிலையில் தற்போது சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் என்ற படத்திற்கு சென்னையில் போக்குவரத்து காவலர்களின் உதவியுடன் சாலை விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு ப்ரோமோஷன் செய்தார். அப்போது அந்த வழியாக வந்த ஷிவாங்கியின் காரை மடக்கி பிடித்து அவருக்கு, சீட் பெல்ட், ஹெல்மெட் அணியவேண்டும், டிரிங்க் அண்ட் டிரைவ் செய்யக்கூடாது என விழிப்புணர்வு செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்து பதறிப்போன ஷிவாங்கி அண்ணே… போதும் விடுங்கண்ணே என கூறி எஸ்கேப் ஆனார்.