100 பேர் முன்னாடி சூர்யாவை கெட்ட வார்த்தையால் திட்டிய இயக்குனர் பாலா – சைலெண்டா நடந்த சம்பவம்!
Author: Rajesh23 பிப்ரவரி 2024, 1:54 மணி
வணங்கான் என்ற பெயரும் சூர்யா 41 படத்திற்கு வந்து கூடிய சீக்கிரம் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கதை போக்கு மாறிப்போனதால் சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலக்கிவிடப்பட்டதாக பாலா அறிக்கை வெளியிட்டார்.
இதற்கு காரணம் பாலா, சூர்யா இடையே கருத்து வேறுபாடும் சண்டையும் தான் காரணம் என்று கூறிப்படுகிறது. மேலும் அவரை கொடுமை படுத்தி டார்ச்சர் செய்து… அதிகம் பணம் பிடிங்கி செலவழித்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் படமே வேண்டாம் என கூறிவிட்டு சூர்யா விலகிக்கொண்டார். இது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதையடுத்து இப்படத்தில் அருண் விஜய் கமிட் ஆனார். ஆனால், அருண் விஜய்யால் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு இயக்குனர் பாலா டாச்சர் செய்து வந்ததாகவும் இருந்தாலும் தன்னிடம் இருக்கும் திறமையை பாலா போன்ற இயக்குநர்களால் தான் வெளிக்கொண்டுவர முடியும் என நம்பி எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கொண்டு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தாராம் அருண் விஜய்.
அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதில் அருண் விஜய் உடல் முழுக்க சேறு பூசிக்கொண்டு ஒரு கையில் பெரியார்.. மறுகையில் பிள்ளையார் வைத்துக்கொண்டு மிரட்டலான தோற்றத்தில் இருந்தார். அதையடுத்து இப்படத்தின் டீசர் வெளியாகியது.
அதில் அருண் விஜய் பிதாமகன் சூர்யா போன்று மிரட்டலான லுக்கில் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இப்படத்தை இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் சூர்யா ஏன் நடிக்காமல் போனார். பாதியில் வெளியேற என்ன காரணம் என்பது குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யார் பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதாவது சூர்யாவை, நந்தா படத்தில் ட்ரீட் பண்ணியது போலவே பாலா வணங்கான் படத்தின் ஷூட்டிங்கில் மரியாதையை இன்றி நடத்தியதாகவும் அவரை ஓப்பன் மைக்கில் பல பேர் முன்னிலையில் ஒருமையில் திட்டியதாகவும் கூறியுள்ளார். சூர்யா தற்போது மிகவும் வளர்ந்த நடிகர் அவரை அறிமுக நடிகர் போன்று ஓடவிட்டுள்ளார் பாலா இதெல்லாம் ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் சூர்யா வெளியேறிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
0
0