கோவிந்தா.. கோவிந்தா.. அப்பனே பெருமாளே படம் ஜெயிக்கணும் – திருப்பதியில் லோகேஷ் சாமி தரிசனம்..!

Author: Vignesh
12 October 2023, 11:07 am
lokesh kanagaraj-updatenews360
Quick Share

தமிழ் சினிமா திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் இளைய தளபதி விஜய். இவர் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் என்றாலே, அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். அதில் முதல் விருந்தாக விஜய் நடித்து வெள்ளி திரைக்கு வரவிருக்கும் திரைப்படத்திற்கான ஆடியோ லான்ச் என்றாலே, விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும், அரசியல் வட்டாரத்தில் விஜய் பேசும் பஞ்ச் வசனங்களும் பெரும் பிரபலமானவை அப்படியாக பேசப்பட்டு வந்தது.

தற்போது வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகமெங்கும் வெள்ளி திரையில் வரவிருக்கும் லியோ திரைப்படத்திற்கு பாதுகாப்பு நலன் கருதி, ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். இதனிடையே படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான ரசிகர்கள் கவனத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்தப் படம் வரும் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றிக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது இயக்குனர்கள் குழுவுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் இதன் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Views: - 247

0

0