அத்துமீறி முத்தம் கொடுக்க கூடாது…. கமலுக்கே கண்டீஷன் போட்ட சினேகா!

Author: Shree
23 November 2023, 6:27 pm
sneha
Quick Share

2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக சினேகா தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் நடிகை சினேகா வசூல் ராஜா MBBS படத்தில் கமல் ஹாசனுடன் நடிக்க மிகவும் தயங்கினாராம். காரணம் அவரது படங்களில் லிப்லாக் காட்சிகள் இடம்பெற்றுவிடும் அதனால் கமல் ஹாசன் முத்த காட்சிகளில் நடிக்க கூடாது. என்னை அதற்காக வற்புறுத்தவும் கூடாது என தெளிவாக கேட்டு ஒப்பந்தம் வாங்கிய பின்னரே நடித்தாராம் சினேகா.

Views: - 179

0

0