நடிகை வீட்டில் அதிரடி ரெய்டு.. திடீரென நுழைந்த அதிகாரிகள் : கட்டு கட்டாக பணம்? திரையுலகம் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
29 November 2024, 4:45 pm

விஜய் படம் மூலம் தமிழ் திரைப்படங்களில் அறிமுகமான நடிகை வீட்டில் ரெய்டு நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, தமிழில் குஷி, மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட சில படங்களில் நடிததுள்ளார்.

இவரது கணவரும், தொழில் அதிபருமான ராஜ் குந்த்ரா 2021ஆம் ஆண்டில் ஆபாச படங்களை தயாரித்து மொபைல் செயலியில் வெளியிட்டதாக கைது செய்யப்பட்டார்.

இதையும் படியுங்க: கணவராகும் காதலர்… திருப்பதி ஏழுமலையானிடம் உருகி உருகி வேண்டிய பிரபல நடிகை!

தற்போது அவர் ஜாமினில் உள்ள நிலையில், ராஜ் குந்த்ராவுக்கு எதிரான பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ED Raids on Shilpa shetty Husband Rajkundra

இன்று, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில், ராஜ் குந்த்ராவின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தம் 15 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!