மூன்றே நாளில் முகப்பருவிற்கு உடனடி தீர்வு.. கேப்ரில்லா கொடுக்கும் சிம்பிள் டிப்ஸ்..!

Author: Vignesh
7 July 2023, 2:04 pm

கேப்ரிலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. தற்போது ஈரமான ரோஜாவே சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

Gabriella Charlton -updatenews360

இந்நிலையில், முகப்பருவால் அவதிப்பட்ட கேபிரில்லா அதை சரி செய்ய என்ன செய்தார் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். அதை சரி செய்ய வீட்டு வைத்தியம் அவருக்கு பெரிதும் கை கொடுத்ததாம். அதை முறையாக பின்பற்றி பிரச்சினையை சரி செய்ய புதினாவை அம்மியில் அரைத்து நன்கு அதில், சிறிதாக ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தின் மீது அப்ளை செய்து வந்தாராம்.

Gabriella Charlton -updatenews360

ஐஸ் கட்டிகளை துணியில், வைத்து கட்டி அதை வைத்து முகத்தை மசாஜ் செய்வாராம். இப்படி செய்வதால் முகத்தில் பரு ஏற்பட காரணமான துளைகள் மறையுமாம். ஒரு நாள் ஒன்றுக்கு மூன்று முறை முகத்தில் பிரஷ்ஷான கற்றாழை ஜெல்லை அப்ளை செய்வாராம்.

Gabriella Charlton -updatenews360

முகப்பருவை சரிசெய்ய உணவு முறையில் அதிகம் கவனம் எடுத்துக் கொள்வாராம். வெள்ளரிக்காய் ஜூஸ், வெந்தையம் ஊறவைத்த தண்ணீர், பழங்கள், நிறைய தண்ணீர் என உணவில் அதிக நீர்ச்சத்தை சேர்த்துக் கொண்டாராம்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!