அவ கண்ணால பார்த்தா ஒரு “ஸ்பார்க்”…. கோட் 3rd சிங்கிள் வீடியோ இதோ!

Author:
3 August 2024, 7:41 pm

நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்துள்ளார். அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரியும் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா , யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் திரைப்படம் உருவாகியுள்ளதால் படத்திற்காக யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றார்கள்.

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் மூன்றாவது பாடலுக்காக ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாகும் என பட குழு அறிவித்திருந்த நிலையில் சற்று முன் கோட் படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாகி உள்ளது.

“அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு… என் முன்னால நடந்தா கேட் வாக்கு” என்ற வரிகளில் துவங்கும் இந்த பாடல் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மீனாட்சி சவுத்ரி மற்றும் விஜய்யின் டூயட் பாடலான இதில் விஜய் ரொமான்ஸ், டான்ஸ் உள்ளிட்டவற்றில் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார் என்று சொல்லலாம். கங்கை அமரன் எழுதியுள்ள இந்த பாடலுக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. இதோ அந்த வீடியோ:

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!