விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?
Author: Prasad10 May 2025, 7:43 pm
கடைசி திரைப்படம்
விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் மமிதா பைஜு, கௌதம் மேனன், பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
விஜய் படத்தை எடுத்தாலே இதான் நிலைமை?
எப்போதும் விஜய் திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு விரைவிலேயே ரஜினி படத்தை இயக்கக்கூடிய வாய்ப்புகள் அமைந்துவிடும் என கூறப்படுவது உண்டு. லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்ற இயக்குனர்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

அந்த வகையில் “ஜனநாயகன்” திரைப்படத்தின் இயக்குனரான ஹெச்.வினோத் ரஜினிகாந்திற்கு ஒரு கதையை கூறினாராம். அந்த கதை ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவருக்குமே பிடித்துப்போய்விட்டதாம். இந்த நிலையில் “ஜனநாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் ரஜினியை வைத்து இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் இத்திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.