எந்த ஆபாச மெசேஜும் இல்லயேமா…? ட்ராமா ஆடிய ரக்ஷிதா – பிரச்சனைக்கு முடிவு கட்டிய போலீஸ்!

Author: Shree
22 June 2023, 12:47 pm

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.

இதனிடையே நேற்று ரட்சிதா மாங்காடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் தான் தினேசை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக தனது செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது மற்றும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுவதாக புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் இன்று தினேசை விசாரணைக்கு அழைத்த நிலையில், போலீஸ் நிலையம் வந்த தினேஷ், ரட்சிதாவிற்கு வேண்டுமானால் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம் என தெரிவித்து விட்டு சென்றார். இந்த புகார் தொடர்பாக ரட்சிதாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரிந்து வாழ்ந்து வரும் கணவர் தனக்கு மிரட்டல் கொடுப்பதாக சின்னத்திரை நடிகை ரட்சிதா அளித்த புகாரால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில்….

இது குறித்து தினேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, எங்களது இருவரின் போனையும் வாங்கி போலீசார் விசாரித்தார்கள். அப்போது நீ சொன்னது போன்று எந்த ஆபாச மெசேஜும் , மிரட்டலும் இல்லையேமா என அவர்களே கேட்டார்கள். இது வழக்கமாக நடக்கும் ஒன்று சாதாரணமாக கேஸ் போட்டால் எந்த கேசும் எடுபடாது. அதனால் என்னிடம் தவறாக நடந்துக்கொண்டார்கள், ஆபாச மெசேஜ் அனுப்புகிறார்கள், மிரட்டல் விடுகிறார்கள் இப்படி ஏதேனும் போட்டால் தான் கேஸ் சீக்கிரமாக எடுப்பாங்க என ரக்ஷிதாவுக்கு அவரது வழக்கறிஞ்சர் சொல்லியிருக்கிறார் அதை அவர் அப்படி செய்துவிட்டார்.

இத்தனை நாள் அவருடன் என்றாவது பழையபடி வாழ்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால். அதெல்லாம் நேற்று அவர் சொன்ன அந்த மூன்று வார்த்தைகளில் முடிந்துவிட்டது. அதாவது நான் பணத்தை கேட்டேன், ஆபாசமாக பேசினேன், மிரட்டினேன் இதெல்லாம் முற்றிலும் போய். இவ்வளவு நடந்தப்பிறகும் எனக்கு அவருடன் வாழவே விருப்பம் இல்லை அவர் விவகாரத்து செய்துக்கொள்ளலாம் நான் தரலாமா கையெழுத்து போட்டு தருகிறேன் என கோபமாக ரக்ஷிதா உடனான உறவை முறித்துக்கொண்டார் தினேஷ்.

  • Good News for Vijay And Trisha விஜய் – திரிஷா குறித்து விரைவில் குட் நியூஸ்.. பற்ற வைத்த பிரபலம்!
  • Views: - 744

    1

    0