நடிகர் விஜய் தலை தப்புமா? மானத்தை காப்பாற்றுமா லியோ? இப்படி ஒரு ட்விஸ்ட்டா!!!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2023, 6:31 pm
Vijay - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தி, தனக்கென தனி ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளவர் நடிகர் விஜய். படம் ஓடுதோ இல்லையோ வசூலில் மட்டும் கவனம் பெற்று விடும் இவரின் படங்கள்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் சக்கை போடு போட்டது.

தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்தை இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். திரிஷா, மன்சூர், அர்ஜுன், மிஸ்கின் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

ஆனால் இந்த படத்துக்கு லியோ படத்தை வைத்ததுதான் கொஞ்சம் ரசிகர்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது. ஏனென்றால் விஜய்யின் படத்துக்கும் வைக்கும் டைட்டிலுக்கும் ஒரு ராசி உண்டு.

குறிப்பாக இவர் விலங்குகள் பெயரில் வைக்கப்படும் பெயர்களில் வெளியாகும் படங்கள் வெற்றி அடையாததே காரணம்.

குருவி

கில்லி வெற்றியை தொடர்ந்து தரணி இயக்கத்தில் வெளியான இந்த படம் பெரியதாக வெற்றி பெறவில்லை. வசூலில் சாதனை புரியாததால் தோல்வி படமாகவே கருதப்பட்டு வருகிறது.

சுறா

50வது படம் என்ற எதிர்பார்ப்பில் வெளியான படம். எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் விஜய்யுடன் தமன்னா, வடிவேலு உட்பட பலர் நடத்த இப்படம் 2010ல் வெளியாகி விஜய் வாழ்வில் மோசமான படம் என்ற முத்திரையை குத்தியது.

புலி

FANTASY திரைப்படம் என எதிர்ப்பார்பில் வெளியான திரைப்படம் புலி. சிம்பு தேவன் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது.

பீஸ்ட்

நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் போஸ்டர், ட்ரெயல்ர், பாடல் என பட்டையை கிளப்பினாலும் படம் பெரியதாக சோபிக்கவில்லை. படம் லாபத்தை பெற்றாலும், விஜய்யின் கேரியரில் சறுக்கல்களை சந்தித்தது.

இந்த நிலையில் விலங்குகள் பெயர் கொண்ட வரிசையில் விஜய்யின் படங்கள் வெளியாகி தோல்வியை தழுவியது என்பதால் லியோ திரைப்படம் இந்த விமர்சனங்களை ஓரங்கட்டுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Views: - 510

0

1