Ex மனைவியை வீட்டிற்கு அழைத்த அனுராக் காஷ்யப் – சிறப்பான சம்பவம் என்ன தெரியுமா?

Author: Shree
5 August 2023, 9:09 am
anuraq
Quick Share

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர பிரபலமாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் அனுராக் காஷ்யப். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதை உருவாக்குனர் என பல திறமைகளை கொண்டிருக்கிறார். இவர் தனது திரைப் பிரவேசத்தை பான்ச் என்கிற இதுவரை வெளியிடப்படாத திரைப்படத்தில் தொடங்கினார். இவர் தனது பிளாக் ஃபிரைடே(Black Friday), தி லன்ச் பாக்ஸ்(The lunch Box), கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர், ஷார்ட்ஸ் போன்ற படங்களின் மூலம் பெரிதும் பாராட்டப்பட்டார்.

இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்து கொலை நடுங்க வைத்தார். தற்போது சசிகுமார் இயக்கப் போகும் ” குற்றப்பரம்பரை” படத்தில் அனுராக் வில்லனாக நடிக்க உள்ளார். நாவல் ஆன குற்றப்பரம்பரை வெப் சீரிஸ் ஆக உருவாகவுள்ளது. இதில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் மற்றும் ராணா முக்கிய ரோலில் நடிக்கின்றனர். குறிப்பாக வில்லன் அனுராக் காஷ்யப்பிற்காக இந்த வெப் சீரிஸை காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதனிடையே விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் அவர் முக்கிய ரோல் ஒன்றில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழில், குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு வில்லனாகவும் நடித்து அசத்தியிருக்கிறார்.

அனுராக் காஷ்யப் 1997-ஆம் ஆண்டு ஆர்த்தி பஜாஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2009 அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். இவர்களுக்கு ஆலியா காஷ்யப் என்ற 22 வயது மகள் இருக்கிறார். இதையடுத்து தன்னுடைய படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த கல்கி கோச்லீன் என்பவரை 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். சில நாட்களிலேயே அவரையும் பிரிந்துவிட்டார்.

அனுராக் காஷ்யப்பை பிரிந்த கல்கி கை ஹெர்ஷ்பெர்க் என்ற நபரை திருமணம் செய்துக்கொண்டு ஒரு பெண் குழந்தை பெற்றார். இந்நிலையில் அனுராக் தனது முதல் மனைவிக்கு பிறந்த மகளான ஆலியா காஷ்யப்பிற்கு திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்கியை அழைத்துள்ளார் அனுராக். கல்கியும் தனது கணவர் மற்றும் மகளுடன் வந்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆஹா இதுவல்லவா ஆனந்தம் என நெட்டிசன்ஸ் அனுராக்கை ட்ரோல் செய்துள்ளனர்.

Views: - 437

0

0