பெட்ரோல் பங்க் மீது விழுந்த ராட்சத விளம்பரப் பலகை.. பறிபோன 14 உயிர்கள் : அதிர்ச்சி வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
14 May 2024, 10:48 am
banner
Quick Share

பெட்ரோல் பங்க் மீது விழுந்த ராட்சத விளம்பரப் பலகை.. பறிபோன 14 உயிர்கள் : அதிர்ச்சி சம்பவம்!

மும்பையின் காட்கோபர் பகுதியில் நேற்று வீசிய புழுதிப் புயலில், பெட்ரோல் பம்ப் மீது 100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது, 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் +1 தேர்வு முடிவுகள் வெளியானது.. முதல் மூன்று இடங்களை பிடித்து கொங்கு மண்டலம் அசத்தல்!

நேற்று இரவு 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி 14 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குடிமைத்துறை அதிகாரிகளின் தகவலின்படி, இந்த விளம்பர பலகை சட்டவிரோதமானது என்று கூறியுள்ளது.

நேற்று வீசிய புழுதிப் புயல் காரணமாக மும்பை விமான நிலையத்தில் மாலையில் ஒரு மணி நேரம் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அது மட்டுமில்லாமல், உள்ளூர் ரயில்களின் சேவைகள் தாமதமானது, பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

Views: - 191

0

0