மேடையில் ரொமான்ஸ் தெறிக்கவிட்ட அசோக் – கீர்த்தி ஜோடி (வீடியோ)

Author: Rajesh
2 February 2024, 4:17 pm
keerthi pandian-updatenews360
Quick Share

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது.

இதனிடையே நடிகை கீர்த்தி பாண்டியனை 10 வருடங்களாக ரகசியமாக காதலித்து வந்த ஷாக் செல்வன் சில மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். தற்போது இவர்கள் கோலிவுட்டின் செலபிரிட்டி ஜோடியாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு ரொமான்டிக் நடனமாடி பார்ப்போரை வெட்கப்பட வைத்துவிட்டார்கள். இது ரொம்ப ரியலாக இருப்பதாக இந்த அழகிய ஜோடியை அனைவரும்புகழ்ந்து தள்ளியுள்ளனர். இதோ அந்த வீடியோ:

Views: - 234

0

0