லியோ படம் BLOCK BUSTER-ஆ… DISASTER-ஆ? விமர்சனம் இதோ!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2023, 5:04 pm
LEO Review- Updatenews360
Quick Share

லியோ படம் BLOCK BUSTER-ஆ… DISASTER-ஆ? விமர்சனம் இதோ!!

7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரிப்பில் தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. ப்ரீ புக்கிங்கில் மட்டுமே உலக அளவில் ரூ. 188 கோடி வரை வசூல் செய்யும் அளவில் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய மலைக் கிராமத்தில் மனைவி, பிள்ளைகள் என அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் பார்த்திபன் (விஜய்). இன்னொரு பக்கம் செயற்கையாக விபத்துகளை ஏற்படுத்தி பணம் பறிக்கும் மிஷ்கின் கும்பலால் தன் மகளின் உயிருக்கு ஆபத்து வரும் நேரத்தில் தன்னையே அறியாமல் ஒட்டுமொத்த கும்பலையும் கொன்றுவிடுகிறார்.

இதனால் போதைப் பொருட்களை கடத்தும் ஆண்டனி தாஸும் (சஞ்சய் தத்) அவரது தம்பி ஹரால்ட் தாஸும் (அர்ஜுன்). இவர்களால் பார்த்திபனுக்கும், அவரது குடும்பத்துக்கும் பல இடையூறுகள் நிகழ்கின்றன. அவற்றில் இருந்து பார்த்திபன் தப்பித்தாரா, இறந்துபோன லியோ யார், இப்படம் LCU-வில் இடம்பெற்றதா? – இப்படி பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘லியோ’ திரைக்கதை.

படப்பிடிப்பு ஆரம்பித்த போதே A History Of Violence படத்தின் தழுவல் என்று சொல்லப்பட்டு வந்தது. அனால் இது குறித்து படக்குழு எதையும் வெளிப்படையாக சொல்லாத நிலையில், லியோ படம் டைட்டில் கார்டில் இது அப்படத்தின் தாக்கத்தில்தான் என்ற நன்றி அறிவிப்பு வந்து விடுகிறது.

முதல் 10 நிமிடங்களை மிஸ் செய்ய வேண்டாம் என லோகேஷ் ஹைப் ஏத்தியிருந்தார். அவர் அப்படி சொல்லாமலே விட்டிருக்கலாம். காரணம் அதுவே தற்போது படத்திற்கு வில்லனாக வந்துள்ளது.

ஊருக்குள் புகுந்த கழுதைப்புலியுடன் சண்டை. அதை கொல்லாமல் அடக்கி வனத்துறை ரேஞ்சரான கௌதம் மேனன் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் எந்த புதுமையும் இல்லாமல் அதை எடுத்துள்ளனர். விஎஃப்எக்ஸ் எஃபெக்ட்டுக்காக அந்த காட்சியை பாராட்டலாம்.

முதல் அரைமணி நேரம் படம் மெதுவாக சென்றாலும், அடுத்த அரைமணி சூடு பிடிக்கிறது. படத்தின் ஆக்ஷன் காட்சிகள் மிரள வைத்துள்ளது.

சஞ்சய் தத், அர்ஜூன் கும்பல் விஜய்யை தேடி வருவது போன்ற திரைக்கதையில் தொய்வு இல்லாமல் முதல் பாதி நகர்ந்து சென்றன. ஆனால் முந்தைய லோகேஷ் படத்துடன் இது ஒப்பிட்டு பார்த்தால் இடைவேளை காட்சியை இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

குறிப்பாக லியோ கதாபாத்திரத்துக்கான ப்ளாஷ்பேக் எழுதப்பட்ட விதம் சொதப்பல். பார்வையாளர்களுக்கு சர்ப்ரைஸ் என்று நினைத்துக்கொண்டே சம்பந்தம் இல்லாமல் வைக்கப்பட்ட சிறப்பு தோற்றங்கள் எல்லாம் சொதப்பல்.

படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் விஜய் உழைப்பு, அனிருத்தின் இசை. ஆனால் வெறும் ஸ்டைலிஷ் மேக்கிங், தெறிக்கவிடும் ஆக்ஷன், முதல் பாதியை தாங்கிப் பிடிக்கும் சில காட்சிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் லியோ மிகப்பெரிய ஏமாற்றம்தான்.

இரண்டாம் பாதியின் ஃப்ளாஷ் பேக் காட்சியை சிறப்பாக எழுதி, தேவையற்ற ஆக்ஷன் காட்சிகளை தவிர்த்திருந்தால் விஜய்க்கு லியோ ஒரு மைல்கல் தான்.

RATING STAR : 2.75/5

Views: - 1158

63

41