இது பிக் பாஸ்ஸா இல்ல.. Wwf ஆ.. இந்த வாரம் Red கார்டு கன்பார்ம்..! (வீடியோ)

Author: Vignesh
19 October 2023, 5:42 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.

bigg boss 7 tamil-updatenews360

இதனிடையே, முதல் நாளில் இருந்தே பிக் பாஸில் நிறைய டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனன்யா ராவ், பவா செல்லத்துரை என இரண்டுபேர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

bigg boss 7 tamil-updatenews360

இதனிடையே, முன்பு எப்போதும் இல்லாத வகையில் சண்டை சச்சரவு பிரச்சனைகள் எல்லாம் இந்த சீசனில் எல்லை மீறி தான் சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்களுக்கு இன்று வழங்கப்பட்ட டாஸ்க் பெரிய அடிதடி சண்டையில் முடிந்திருக்கிறது.

யாரிடம் அதிக சிலிண்டர் இருக்கிறதோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். அதில் இரண்டு வீட்டாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், அதில் கண்ணாடி கதவுகளும் உடைந்து விட்டது. அப்படி எல்லா போட்டியாளர்களும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்க விஜய் வர்மா மற்றொரு போட்டியாளரான பிரதீப்பை தூக்கி கீழே போட்டு இருக்கிறார்.

bigg boss 7 tamil-updatenews360

இது பிக் பாஸ்ஸா இல்ல.. Wwf ஆ.. என ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். அதனால், இந்த வாரம் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், சிலர் விளையாட்ட இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா இப்படியா ஒருவரை ஒருவர் காயப்படுத்தி விளையாடுவது என்று விமர்சித்தும் வருகின்றனர்.

  • One Dead in Pushpa 2 Stampedeகாவு வாங்கிய புஷ்பா 2… திரையரங்கில் தாய் பலி.. 9 வயது மகன் கவலைக்கிடம்!
  • Views: - 483

    0

    0